100 நாள் வேலை திட்டப்பணியில் முறைகேடு; அனைத்து கட்சியினர் போராட்டம்
- வத்திராயிருப்பு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் முறைகேடு நடந்துள்ளது.
- இதனை கண்டித்து அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஐ.என்.டி.யு.சி. மேற்கு மாவட்ட தலைவர் அண்ணா துரை தலைமை வகித்தார். அ.தி.மு.க. கிளை செயலா ளர் செல்வம் முன்னிலை வகித்தார். வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 1236 பயனாளி கள் உள்ளனர்.
திட்டத்தின் கீழ் தம்பிபட்டி கண்மாய், நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகள் மற்றும் நீர்நிலை கள் தூர்வாரும் பணி நடை பெறுகிறது. ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணி நடை பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் மகா லிங்கம், காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் தவமணி, பா.ஜனதா நிர்வாகி சந்தனகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.