அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
- காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலு வலர்- மாற்றுத்தி றனாளி நலத்துறை செயலாளர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் உணவு மற்றும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களு டன் அமர்ந்து சாப்பிட்டனர்.
பி.புதுப்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பி.புதுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பி.புதுப்பட்டி ஊராட்சி யில், துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மின் ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியில் மறுமுறை சார்ஜ் செய்யும் வசதி உள்ள மின்கலத்தை பயன்படுத்துமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
காரியாபட்டி வட்டம் கம்பிக்குடி ஊராட்சி மந்திரிஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 குடும்பங்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டுப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும், முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர்கள் செய்முறை தேர்வு செய்து வருவதை பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
பி.புதுப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம், எடை, குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் அங்குள்ள சமையலறை ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)தண்டபாணி, செயற்பொறியாளர் சக்தி முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக பிரியா, சிவகுமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.