- கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
- நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்களால் தாக்கினர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாறு அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது.
இந்த கடையில் பூமிநாதன், முத்துக்கருப்பன், நாராயண சாமி, பெருமாள்ராஜ் ஆகி யோர் விற்பனையாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். மேற்பா ர்வையாளர்களாக செந்தில், மாரியப்பன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை மூடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். அதனை தடுக்க முயன்ற பூமி நாதனை அரிவாளால் வெட்டினர்.
மேலும் விற்பனையா ளர்கள் நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்க ளால் தாக்கினர்.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியரிடம் இருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள், அரை பவுன் மோதிரம் ஆகிய வற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த கடை ஊழியர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுபற்றிய புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி னர்.
மேலும் கடை செயல்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய நபர்களை போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.