ராக்காச்சி அம்மன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ராக்காச்சி அம்மன் கோவில்.இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.
குறிப்பாக பாலாறு, பல்லாறு என்று அழைக்கப்படும் பகுதியில் சுமார் 32 விவசாயிகளின் 82 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் ஓடை மற்றும் ஓடை கரை அமைந்துள்ளது. இந்த இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த தாக விவசாயிகள் 32 பேரும் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் புகார் செய்தனர்.
குறிப்பாக 15 விவசாயிகள் மனுவாக கொடுத்து கோர்ட்டையும் நாடினர். இதன் அடிப்படையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன். மண்டல துணை வட்டாட்சியர் ஆண்டாள். ஆர்.ஐ.தங்க புஷ்பம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசா யிகளின் பயன்பாட்டுக்குரிய ஓடை மற்றும் பாதையை ஜே.சி.பி. எந்திரம் உதவி யுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர்.