கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது
- கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
- மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.வாகைக்குளம் பகுதியில் கிருதுமால் நதி ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்த நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நிலையில் கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அர்ச்சுனன் மாவட்ட கலெட்கருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். ஜே.சி.பி. எந்திரம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.