கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள்
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
- இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
விருதுநகர்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை ஏ.பி.டி.எஸ்.எம்.பி.எஸ். மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படும். இதில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளும், ஆலோச னைகளும் வழங்கப்படும்.
மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக் கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.