சாலையோர வியாபாரிகள் சங்க 13-ம் ஆண்டு தொடக்கவிழா
- ராஜபாளையத்தில் சாலையோர சிறு வியாபாரிகள்-தொழிலாளர்கள் சங்க 13-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
- உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் விருதுநகர் மாவட்ட சாலையோர சிறுவியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமை தாங்கி பேசினார். தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சங்க பொதுசெயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களை ராஜபாளையம் நகராட்சிக்கு கொண்டு வந்து சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து பேசினார். உணவு பாதுகாப்பு பற்றி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.
தமிழ் மாநில சிறு வணிகம் மற்றும் தள்ளுவண்டி சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுந்தர் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை சங்க பொதுசெயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.