உள்ளூர் செய்திகள்

சட்டத்துக்கு புறம்பான ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை

Published On 2023-08-05 07:10 GMT   |   Update On 2023-08-05 07:10 GMT
  • சட்டத்துக்கு புறம்பான ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மேற்கண்ட தகவலை கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (ராமநாதபுரம்), ஆஷா அஜித் (சிவகங்கை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்

கைத்தறி தொழிலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையர் மூலம் அமல்படுத்தப்பட்ட கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம், தமிழக அரசின் கைத்தறி ஆணையர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டம் பிரத்யேகமாக கைத்தறியில் மட்டுமே உற்பத்தி மேற் கொள்ளவதற்காக 11 ரகங்கள் சட்டத்தில் விவ ரித்துள்ளபடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்க வஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி ஜமுக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் போன்ற ரகங்கள் விசைத் தறியில் உற்பத்தி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்கும் நோக்கில் கைத்தறி துறையால் தற்போது அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சட்டத்துக்குப் புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவ டிக்கைகளை கண்டறி யும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்படும்.

மேலும், தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவா ளர்களின் இடர்பாடுகளை களைந்திடும் வகையில், தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலை வாய்ப்பும், அதற்கான ஊதியமும் பெற்று பயன டைய வேண்டும்.

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற மதுரை மாவட்டத்தில் 21/9, கக்கன் தெரு, செனாய் நகரில் உள்ள உதவி அமலாக்க பிரவு அலுவ லகத்தை அணுகலாம். அல்லது சென்னை கைத்தறி ஆணையரக அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 98846-97637, 89369-97637, 91760-97637, 91766-17637, 91766-27637, 98845-97633, 98849-97633, 89391-97633, 89394-97633, 91763-97633 என்ற எண்களில் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (ராமநாதபுரம்), ஆஷா அஜித் (சிவகங்கை) ஆகியோர் தெரிவித்துள் ளனர்.

Tags:    

Similar News