அரசு மேல்நிலைப்பள்ளியில் 13 மாணவிகளை சேர்த்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் 13 மாணவிகளை சேர்த்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டினர்.
- விண்ணப்ப படிவங்களை மாணவிகளுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்யப்பட்டு உடனடியாக அட்மிஷனும் போடப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாலையாபுரம் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த 13 மாணவிகள் மேல்படிப்பிற்காக ராஜபாளையம் நகரில் உள்ள எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்க இடம் வாங்கி தருமாறு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அவர் மாணவிகளை அழைத்துக் கொண்டு அந்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரி யரிடம் பேசி மாணவி களுக்கு பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்து கொடுத்தார். மேலும் விண்ணப்ப படிவங்களை மாணவிகளுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்யப்பட்டு உடனடியாக அட்மிஷனும் போடப்பட்டது. நாங்கள் கேட்டதும் பள்ளிக்கு நேரில் வந்து இடம் வாங்கி கொடுத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு மாணவிகள் குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்தனர்.
ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படிப்பிற்காக பள்ளியில், கல்லூரியில் இடம் வேண்டும் என்று தன்னை எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று அவர்களுக்கு கல்வி பயில இடம் வாங்கி கொடுக்க தயாராக இருப்பதாக எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.
சிறப்பு வாய்ந்த பணியை செய்து முடித்து தனது பதவிக்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சமூக ஆர்வலர்களும், ஆசிரி யர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.