உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்தது.

ஓய்வூதியம்: 78 மனுக்களுக்கு தீர்வு

Published On 2022-08-18 09:19 GMT   |   Update On 2022-08-18 09:19 GMT
  • ஓய்வூதியம்: 78 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
  • கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஒய்வூதிய இயக்கு நரக இணை இயக்குநர் தி கமலநாதன் முன்னிலையில், கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 78 மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய பதி லும், தீர்வும் காணப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், ஒய்வூதிய இயக்குநரக துணை இயக்குநர் மதிவாணன், மாவட்டக் கருவூல அலுவலர் சண்முகநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராஜலட்சுமி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News