சொத்து தகராறு: தம்பி கொலை, அண்ணன் கைது
- சொத்து தகராறில் தம்பிையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (வயது52), முருகன் (32), மணிகண்டன் (29), விநாயகமூர்த்தி (22) என்ற மகன்களும், ராஜேஸ்வரி (24), முருகேஸ்வரி (48) என்ற மகள்களும் உள்ளனர்.
இவர்களுக்கிடையே பல வருடங்களாக குடும்ப சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சொத்து பிரச்சினை குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அதன் பேரில் அனைவரும் நேற்று மாலை சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள முத்தீஸ்வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஒருவருக்கு ஒருவர் வாக்கு வாதம் ஏற்பட்டு ள்ளது.
இதில் பயங்கர ஆயுதங்க ளுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கழுத்து அறுக்கப்ப ட்டு படுகாயம் அடைந்த முருகன், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ெசல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
3 பேருக்கு சிகிச்சை
மேலும் இந்த சம்பவத்தில் முருகன் மனைவி இந்திராதேவி, அவரது தாயார் பெரியதாய், மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலைவழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.