கடலூரில் சி.ஐ.டி.யூ.வினர் நடைபயண பிரசாரம்
- தமிழகத்தில் 7 முனைகளில் இருந்து சி.ஐ.டி.யூ.வினர் நடை பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
- நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை எதிர்த்தும், தொழிற்சாலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 முனைகளில் இருந்து சி.ஐ.டி.யூ.வினர் நடை பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் தொடங்கிய நடைபயண பிரசாரத்திற்கு மாநில உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால், கடலூர் மாவட்ட செயலாளர் பழனிவேல், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கண்ணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன், நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து தொடங்கிய பிரசார நடை பயணம் பாரதி சாலை, செம்மண்டலம், சாவடி மற்றும் கோண்டூர் வழியாக நெல்லிக்குப்பம் வரை சென்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாரியப்பன், அரியலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் சுப்பராயன், ராஜேஷ் கண்ணன், திருமுருகன் ஸ்டாலின், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பிரசார பயணமானது மே 30-ம் தேதி சி.ஐ.டி.யூ. அமைப்பு தினத்தன்று திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.