முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல் சாகுபடிக்காக கடந்த 1ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
- தண்ணீர் திறப்பு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
கூடலூர்:
கேரளாவில் பருவ–மழை போக்கு காட்டி வரும் நிலையில் முல்லை–ப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல் சாகுபடிக்காக கடந்த 1ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாற்றாங்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட விவசாய பணிகளில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று வரை 600 கன அடி பாசனத்திற்கும், 100 கன அடி குடிநீருக்கும் திறக்கப்பட்டது.
இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு 410 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 129.25 அடியாக உள்ளது. 71 அடி உயரம் கொண்டுள்ள வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக சரிந்து 54 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு 297 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையில் இருந்து 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.30 அடியாக உள்ளது. 59 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்ைல. சோத்துப்பாறை அைணயின் நீர்மட்டம் 86.26 அடியாக உள்ளது. 97 கன அடி நீர் வருகிறது. 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3.8, தேக்கடி 6.8, கூடலூர் 1.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.