உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2024-08-06 05:20 GMT   |   Update On 2024-08-06 05:20 GMT
  • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
  • நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் இன்று வினாடிக்கு 38, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் தருமபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிக அளவில் வருவதால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 24-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

மேலும் நீர்வரத்து காவிரி ஆற்றில் அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்து உள்ளது என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

Similar News