வைரத்தை விட மதிப்புமிக்கது தண்ணீர் - நகர்மன்ற தலைவர் பேச்சு
- திருத்துறைப்பூண்டியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- தண்ணீர் என்பது தங்கம், வைரத்தை விட மதிப்பு மிக்கது.
திருத்துறைப்பூண்டி:
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் 17- வது வார்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கவுன்சிலர் ரமேஷ்குமார் தலைமையிலும், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து க்கொண்டு பேசும்போது, தண்ணீர் என்பது தங்கம், வைரத்தை விட மதிப்பு மிக்கது. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி தண்ணீருக்கு உண்டு.
உலகமே தண்ணீருக்கு போரிடும் நிலை வரலாம். நீர்நிலைகள் அனைத்தையும் தூய்மைபடுத்தி தண்ணீரை சேமிக்க வேண்டும். வீணாக தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் நினைத்தால் மட்டுமே தண்ணீரை பாதுகாக்க முடியும்.எனவே நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் தண்ணீர் சிக்கனம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீர் நிலை கரைகளில் மரக்கன்று நடப்பட்டது.
முன்னதாக தூய்மை பாரத மேற்பார்வையாளர் அம்பிகா வரவேற்றார், மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பெண்கள் ,சுகாதார பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.