உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Published On 2023-03-12 09:22 GMT   |   Update On 2023-03-12 09:22 GMT
  • நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
  • கீழ்தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.

ஊட்டி,

சுற்றுலா நகரமான ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் கோடை சீசனுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பார்கள்.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை சீசன் களைகட்டி காணப்படும். அப்படி வருபவர்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், உள்ளூா் மக்களின் குடிநீா் தேவையை சமாளிக்கவும் பாா்சன்ஸ்வேலி, மாா்லி மந்து, டைகா் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா ஆகிய அணைகளின் நீா் இருப்பு மிக முக்கியமானது.

இங்குள்ள முக்கிய குடிநீா் ஆதாரங்களான 50 அடி கொள்ளளவு கொண்ட பாா்சன்ஸ் வேலி அணை, 23 அடி கொள்ளளவு கொண்ட மாா்லி மந்து அணை, 39 அடி கொள்ளளவு கொண்ட டைகா்ஹில் அணை, 35 அடி கொள்ளளவு கொண்ட கோரிசோலா அணை, 25 அடி கொள்ளளவு கொண்ட மேல் தொட்டபெட்டா, 14 அடி கொள்ளளவு கொண்ட கீழ் தொட்டபெட்டா அணை ஆகியவற்றில் சராசரியாக 90 சதவீத அளவுக்கு நீா் இருப்பு உள்ளது.

இதனால், வரும் மே மாதம் நடைபெறும் கோடை சீசனில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீா் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News