உடன்குடி அருகே சமத்துவ பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகள்
- உடன்குடி யூனியனுக்கு உட்பட்டசெட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஏற்பாட்டில் தாங்கையூர்மியா வாக்கியா காட்டில் சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி தலைமை தாங்கி சமத்துவ பொங்கலிட்டு 500 பேருக்கு வேட்டி, சேலை, அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்டசெட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஏற்பாட்டில் தாங்கையூர்மியா வாக்கியா காட்டில் சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி தலைமை தாங்கி சமத்துவ பொங்கலிட்டு 500 பேருக்கு வேட்டி, சேலை, அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா, உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில் பிள்ளை, ராம்பிரசாத் ராம்குமார், உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சதீஷ், உடன்குடி வணிகர்கள் சங்க தலைவர் அம்புரோஸ், மாவட்ட தி.மு.க., பிரதிநிதி ஜெயபிரகாஷ், குலசேகரன் ஊராட்சிபட்டினம் தலைவர் கணேசன், செட்டியா பத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரா. மஞ்சுளா, உஷாராணி, சிவபாலன், சக்தி கனி, ஜெயக்குமார், கலா, மு.மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சக்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது