உள்ளூர் செய்திகள்
இது என்ன நியாயம்? -அண்ணாமலை கேள்வி
- எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
- கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார்.
செந்தில்பாலாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டது, பின்னர் அந்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்தது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, இது என்ன நியாயம்? என்று புரியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அ.தி.மு.க. அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
ஆனால் இப்போது கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் தனது அமைச்சரவை அமைச்சரை கவர்னர் டிஸ்மிஸ் செய்ததை அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்கிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
செந்தில்பாலாஜி ஊழல் செய்துள்ளார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர ஒட்டு மொத்த தமிழகமும் விரும்புகிறது என்றார்.