உள்ளூர் செய்திகள்

இன்று அதிகாலை பரவலான மழை

Published On 2022-11-27 09:35 GMT   |   Update On 2022-11-27 09:35 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் மழை குறைந்து தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
  • தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்றனர்.

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் மழை குறைந்து தொடர்ந்து மேக மூட்டத்துடன் காண ப்பட்டு வருகிறது.

ஆனால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார வன பகுதிகளில் இரவு ேநர ங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில் சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.

சத்தியமங்கலம், அரசூர், அரியப்பம் பாளையம், ஒட்டக்குட்டை, புளியம் கோம்பை, பெரிய குளம், கெஞ்சனூர், பவானி சாகர், பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்க ளில் நள்ளிரவு 1 மணிக்கு பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய இன்று காலை 6 மணி வரை மழை தூறி கொண்டே இருந்தது.

இதே போல் தாளவாடி, ஆசனூர், தலமலை, திம்பம் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்பட்டது.

தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டத்துடனேயே காண ப்பட்டது. மேலும் மொட க்குறிச்சி, 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை உள்ளிட்ட இடங்களில் இன்று அதி காலை லேசான மழை பெய்தது.

ஒரு சில இடங்களில் மழை நீர் வழிந்து ஓடியது. அதிகாலை பெய்த மழை யால் மஞ்சள், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் காணப்பட்டது. இதனை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் லேசான குளிர் காற்றும் வீசி வருகிறது.

இதனால் மொடக்குறிச்சி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News