கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் நோக்கமாகும்.
- 28-ந் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து, அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் நோக்கமாகும்.
அதன்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசாணையில் தெரிவித்துள்ளபடி, கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில்முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவ ரிக்கு உரிய ஆவணங்க ளுடன் வருகிற 28-ந் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பி க்கலாம். இவ்வாறு அந்த செய்திக்கு றிப்பில் கூறப்ப ட்டுள்ளது.