உள்ளூர் செய்திகள்

காட்டுப் பன்றியை வேட்டையாடியவர் கைது

Published On 2022-11-17 09:29 GMT   |   Update On 2022-11-17 09:29 GMT
  • சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகம், வெள்ளார் பஞ்சாயத்து சின்னகம்மம்பட்டி கிராமத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடியவரை போலீசார் கைது செய்தனர்.
  • மேலும் அவர் மீது குற்ற வழக்கு பதிவுசெய்து ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகம், வெள்ளார் பஞ்சாயத்து சின்னகம்மம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சின்ன குழந்தை மகன் கோவிந்தராஜ் என்பவரின் வீட்டில் காட்டுப்பன்றி இறைச்சி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வெள்ளார் கிராம நிர்வாக அலுவலர், டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் தலைமையில் சென்ற வனவர் ஆகியோர் கோவிந்தராஜ் வீட்டில் சோதனை செய்தனர்.

இதில் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். கோவிந்தராஜை டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலகம் கொண்டு சென்றனர். மேலும் அவர் மீது குற்ற வழக்கு பதிவுசெய்து கோவிந்த ராஜூக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சி வனக்குழு தலைவர் அபிராமி மற்றும் வனச்சரக அலுவலர் முன்னிலையில் வனச்சரக அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து புதைக்கப்பட்டது. 

Tags:    

Similar News