சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் திடீர் சாவு
- கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.
- சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வெள்ளரி வெள்ளி சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி கோமதி (வயது 24), மாற்றுத் திறனாளியான இவருக்கு தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 17-ம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் கோம தியை சிகிச்சைக்காக உற வினர்கள் அனுமதித்தனர்.
அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோமதியின் உடல் நிலைமிகவும் மோசமடைந்தது. இதனால் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் கோமதி இறந்தார் என கூறி எடப்பாடி ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எடப்பாடி போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.