தொழிலாளி எரித்து கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
- விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
- தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக் கோட்டை வட்டம் தளி அருகே ஒசபுரம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தைல மரத்தோப்பில், உடல் எரிந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, தளி போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள மரத்தின் அருகே, பாலித்தின் பையில் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இந்த கிராமம், கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், கொலையானவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கர்நாடக மாநில எல்லையில் உள்ள போலீஸ் நிலை யங்களுக்கு தகவல் தெரிவித்து, விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த லூர்து சாமி மகன் சுரேஷ்பாபு என்கிற அலுமினிய சாமி (45) என்ற தொழிலாளி, மாயமானதாகவும், பெங்களூரு கெங்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் எதற்காக கொலை செய் யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.