களிமண் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
- விநாயகரை நன்றியுடன் போற்றும் விதமாக வீடுகள்தோறும் களிமண் விநாயகரை பூஜையறையில் வைத்து வழிபடுவது.
- நீர் கொழுக்கட்டை, இனிப்பு வகை கொழுக்கட்டை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருவையாறு:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31 ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருவையாறு மற்றும் சுற்று வட்டாரங்களிலுள்ள விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது. கிராமங்களில் பொது இடங்களில் களிமண் முதலிய எளிதில் கரையும் பொருள்களால் தயாரிக்கப்பட்டபல்வேறு வடிவங்களில் பிரம்மா ண்டமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
பின்னர் அச்சிலைகள் ஆறுகளில் கரைக்கப்பட உள்ளது.
அகத்திய முனிவர் சினம் கொண்டு கமண்டலத்தில் அடைத்து வைத்த காவிரியை, இரக்க மனம் கொண்டு காக்கை உருவெடுத்து வந்து விடுவித்து, விவசாயம் செழிக்கச் செய்து,குடிநீர் மற்றும் உணவுப்பொருள் விளைச்சலுக்கு வகை செய்த விநாயகரை நன்றியுடன் போற்றும் விதமாக, வீடுகள்தோறும் களிமண் பிள்ளையாரை பூஜையறையில் வைத் வழிபாடு செய்வது வழங்கம்..
மேலும், விநாயகருக்கு பிடித்தமான வாழைப்பழம், சுண்டல், மோதகம் எனும் பிடி கொலுக்கட்டை, பூர்ணக் கொழுக்கட்டை, நீர்க் கொழுக்கட்டை முதலிய இனிப்பு வகைக் கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் வீடுகளில் பூஜையறையில் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள் திருவையாறில் பானை வனையும் தொழிலா ளிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக கடைவீதி களில் கொண்டு வந்து வைத்துள்ளனர்.