உள்ளூர் செய்திகள்
குடிமை பட்டா கேட்டு ஏற்காட்டில் தாலுகா அலுவலகம் முற்றுகை
- குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
- 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிமனை பட்டா வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் கட்சியினர் மற்றும் ஏற்காடு முருகன் நகர், ஜெரினக்காடு, பட்டிபாடி, கீரைக்காடு, கொட்டச்சேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300 பேர் வீட்டு மனை பட்டா வேண்டி ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு டவுன் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கிராம மக்கள் குடிமனை பட்டா வேண்டி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார், பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.