'புளூடூத்' இயர்போன் பயன்படுத்தி அரசு தேர்வு எழுதிய வாலிபர்...
- வாலிபர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார்.
- சிறிது நேரத்தில் வாலிபர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது.
வேலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.
வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார். அறையின் மேற்பார்வையாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை மேற்பார்வையாளர் அவரது காதில் இருந்த கட்டைப் பிரித்து பார்த்தபோது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.