உள்ளூர் செய்திகள்
ராமாபுரத்தில் வாலிபரை கத்திரிக்கோலால் குத்திய நண்பர் கைது
- சுரேஷ் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
- மது குடித்தபோது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
சென்னை:
ராமாபுரம், மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இரவு மது குடித்தபோது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் அருகில் கிடந்த கத்திரிக்கோலால் ராஜேசை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, தோள்பட்டை மற்றும் இடுப்பில் பலத்த காயம் அடைந்த அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.