உள்ளூர் செய்திகள்
- இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அருகே உள்ள நத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 39).
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே சம்பவத்தன்றும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.