ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-பெண் தற்கொலை
- ட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ர ஹாரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு கோபால கிரு ஷ்ணன்(25), பால கிருஷ்ணன்(23) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் கோபால கிருஷ்ணன் தார்ப்பாய் வேலைக்கு சென்று வந்து ள்ளார். இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் கடந்த 2 வருடமாக கோபால கிருஷ்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்த ன்று கோபால கிருஷ்ணன் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் கோபாலகிருஷ்ணன் மட்டும் இருந்துள்ளார். மதியம் வெளியே சென்று விட்டு மீண்டும் கோபாலகிரு ஷ்ணனின் தாய் மாதம்மாள் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபால கிருஷ்ணனை மீட்டு ஒரு ஆட்டோவில் சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியி லேயே கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரி வித்தார்.
இது குறித்து கருங்கல்பா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பழைய பாளையம் ,இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி லோகநாயகி(42).
கடந்த சில வருடங்க ளாகவே லோகநாயகி வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
இருந்தாலும் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. வயிற்று வலியால் வாழ்வதை விட செத்து விடலாம் என்று அடிக்கடி அவர் கூறி வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த துரை சாமி கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழி யாக பார்த்த போது லோக நாயகி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று லோக நாயகியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.