உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மாரியம்மன் கோவில் சூலாயுதத்தை திருடிய வாலிபர்: பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

Published On 2023-10-11 09:44 GMT   |   Update On 2023-10-11 09:44 GMT
  • இதனை கண்ட பொதுமக்கள், தப்பிக்க முயன்ற குமரேசனை மடக்கி பிடித்தனர்.
  • கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணை நல்லூர் அருகேயுள்ள மாதம்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன்பாக பித்தளையால் செய்யப்பட்ட சூலாயுதம் நடப்பட்டிருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் சூலாயுதத்தை வணங்கிவிட்டு பின்னர் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிப்பர். இந்நிலையில் முத்துலிங்கமடம் கிராமத்தின் இருளர் குடியிருப்பில் வசிக்கும் குமரேசன் (வயது 38) என்பவர் இன்று விடியற்காலையில் சூலாயுதத்தை திருடினார். இதனை கண்ட பொதுமக்கள், தப்பிக்க முயன்ற குமரேசனை மடக்கி பிடித்தனர்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசாரிடம் குமரேசனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சூலாயுதத்தை பறிமுதல் செய்து, ஊர் பிரமுகர்களிடம் வழங்கி, கோவிலுக்குள் பாதுகாப்பான இடத்தில் நடும்படி திருவெண்ணைநல்லூர் போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் மாதம்பட்டு கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News