கதம்பம்

வாகனத்தை நாய் ஏன் துரத்துகிறது?

Published On 2024-07-01 11:15 GMT   |   Update On 2024-07-01 11:15 GMT
  • நாயின் துரத்தலுக்கு பயந்து வாகனத்தினை வேகமாக செலுத்தினால் அந்த நாயும் வேகமாக துரத்தி வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உண்டாகும்.
  • நாய் துரத்தினால் வாகனத்தினை சட்டென பயப்படாமல் நிறுத்தினால் நாய் அருகில் வந்து பார்த்து எதிர்பார்த்த நாய் இல்லாத நிலையினைக் கண்டு குழம்பி நின்று விடும்.

தெருநாய்கள் ஏன் திடீரென தெருவில் போகும் வாகனங்களை குரைத்துக் கொண்டே துரத்த ஆரம்பிக்கிறது?

அதற்கான அறிவியல் பூர்வமான காரணம் என்ன ? அதனால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க என்ன வழி?

அதற்கான சரியான காரணம் என்னவெனில் துரத்தப்படும் வாகனமானது எங்கேயாவது நின்று இருந்தபோது அதன் மீது அந்த பகுதியில் வசித்த ஒரு தெரு நாய் அதன் சிறுநீரைக் அந்த வாகனத்தின் மீது கழித்து தனது எல்லையை வரையறுத்து இருக்கும்.

தற்போது அந்த சிறுநீர் மணத்துடன் வாகனமானது இன்னொரு நாயின் எல்லைக்குள் நுழையும் போது இங்குள்ள நாய் அந்த சிறுநீரை மோப்பம் பிடித்து அந்த வாகனத்தினை எதிரி நாயாக பாவித்து துரத்த ஆரம்பிக்கும்.

நாயின் துரத்தலுக்கு பயந்து வாகனத்தினை வேகமாக செலுத்தினால் அந்த நாயும் வேகமாக துரத்தி வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உண்டாகும்.

ஆகவே அப்படி நாய் துரத்தினால் வாகனத்தினை சட்டென பயப்படாமல் நிறுத்தினால் துரத்தி வரும் நாய் அருகில் வந்து பார்த்து எதிர்பார்த்த நாய் இல்லாத நிலையினைக் கண்டு குழம்பி நின்று விடும்.

அடுத்து வீட்டுக்கு சென்ற பின்னர் முதல்வேலையாக நீரை வாகனத்தின் மீது பீய்ச்சி அடித்து நாயின் சிறுநீர் மணம் போகும்படி கழுவி விடவும்.

-லாயர் செந்தில் குமார்

Tags:    

Similar News