கதம்பம்

கெட்டதையும் நல்லதாக்கலாம்!

Published On 2024-08-02 11:06 GMT   |   Update On 2024-08-02 11:06 GMT
  • பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது.
  • புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், அல்லல் படுகிறார்கள்

'குருவே! "நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது'?

அந்த குரு, சிறிய புன்னகையோடு, 'அது அவரவர் இஷ்டம்' என்று சொல்லிவிட்டார்.

சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு தட்டில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்!

குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு, பின்வருமாறு விளக்கம் அளித்தார். 'பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?'

சாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம். இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவாறு பதிலைக் கூறினார்.

இறைவன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது. புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், அல்லல் படுகிறார்கள்

-மதுரம்

Tags:    

Similar News