- ஆலமரத்தடியில் தான் வியாபாரங்கள் நிகழ்ந்து வந்தன.
- கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு.
இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாறிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் 'பனியாவே' – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே 'பானியன் ட்ரீ' என்று பெயர் வந்த வரலாறு.
கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம். கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு. உலகிலேயே பெரிய ஆலமரம் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ளது 1782-இல் ஒரு ஈச்சமரத்தில் முளைத்து வளர்ந்த இந்த ஆலமரம் ஒன்றரை ஏக்கர் பரப்பிற்கு விழுதுகளை இறக்கிக் கிழக்கு மேற்காக சுமார் 400 அடியும் தெற்கு வடக்கில் சுமார் 300 அடியும் பரவி இதன் சுற்றளவு சுமார் 2000 அடி என்று சொல்லுகிறார்கள்.
-கவுரி சங்கரி