இக்கட்டான நிலையில் மவுனமே சிறந்தது!
- மூன்று நீதிமன்றங்களும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கின
- மூவரும் லண்டன் சிறையில் ஒரே நேரத்தில் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் மூன்று நகரங்களில் மூன்று தனித்தனி கொலை வழக்குகள் நடைபெற்றன.
மூன்று நீதிமன்றங்களும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கின
ஒருவர் மதகுரு,
இரண்டாமவர் ஒரு வழக்கறிஞர்,
மூன்றாவது நபர்மெக்கானிக்கல் இஞ்சினீயர்.
மூவரும் லண்டன் சிறையில் ஒரே நேரத்தில் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
முதலில் மதகுரு கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.
மேடையில் இருந்த விசைப்பலகை இழுக்கப்பட்டது,
ஆனால் மதகுருவின் கழுத்தை இறுக்காமல் முடிச்சு நின்றுவிட்டது.
"எப்படி முடிச்சு இறுகாமல் நின்றது?" என்று ஆச்சரியத்துடன் சிறை அதிகாரி மதகுருவைக் கேட்டார்.
"ஆண்டவன்! அந்த ஆண்டவன்தான் என்னைக் காப்பாற்றினான்" என்றார் மதகுரு.
சட்டப்படி ஒரு முறைதான் தூக்கில் போட முடியும். அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அடுத்ததாக வழக்கறிஞர், அழைத்துவரப்பட்டார்.
அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.
விசைப்பலகை இழுக்கப்பட்டது,
ஆனால், என்ன ஆச்சரியம், வழக்கறிஞர் கழுத்தையும் இறுக்காமல் முடிச்சு பாதியில் நின்றுவிட்டது.
அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது, "நீதி! நீதி தேவதைதான் என்னைக் காப்பாற்றியது" என்றார் வக்கீல்.
சட்டப்படி அவரும் விடுவிக்கப்பட்டார்
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இஞ்சினீயர் சொன்னார்: "சரியான முட்டாப்பசங்க நீங்க. அந்த கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதுதான் சுறுக்கு இறுகாமல் தடுக்கிறது. அதை கவனிக்காமல் ஆண்டவன் காப்பாற்றினான், நீதி தேவதை காப்பாற்றினாள் என்று அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள்…" என்று சொன்னார்,
சிறை அதிகாரி "யோவ்.. அந்த கயிற்றை பிரிச்சி செக் பண்ணுங்கையா.. சார் ஒரு இஞ்சினீயர். அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்" என்றார்.
உடனே அந்த தூக்குக் கயிற்றை பரிசீலித்தனர்.
அங்கே அவர் சொன்ன மாதிரி முடிச்சு இருந்தது.
அதனை சரி செய்தனர்.
அப்புறம் என்ன?
இஞ்சினீயர் எந்த பிரச்சனையும் இல்லாமல் தூக்கில் போடப்பட்டார்….
நீதி:- "வாழ்வா சாவா என்ற பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கும்போது, வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருப்பது சாலச் சிறந்தது…"
-பி.சுந்தர்