கதம்பம்
null

மூளையைப் பாதிக்கும் மாசுக்காற்று

Published On 2024-10-06 11:15 GMT   |   Update On 2024-10-06 11:16 GMT
  • மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது.
  • மூளையில் ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன.

வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசு அதிகரித்து வருகிறது.

காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என்கின்றன, புதிய ஆய்வுகள்.

நமது மூக்கில் உள்ள ஆல்பாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வதற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்புபடுத்துகிறது. நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாசுத்துகளின் அளவு அதிகமாக இருந்தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இந்த துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டை பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்த துகள் நுரையீரலை சென்றடையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளித்தள்ளுகிறோம்.

இந்த துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்பாக்டரி எபிதீலியம் வழியாகச்சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும்.

நம் வீட்டில் காற்றை சுத்தப்படுத்தும் தொட்டிச்செடிகளை வளர்க்கலாம். துளசி, கற்றாழை, மஞ்சள், மணி ப்ளான்ட், ஓமவல்லி, புதினா ஆகிய சிறிய செடிகள் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வேப்பமரம், புங்கமரம் ஆகிய இரண்டையும் வளர்க்கலாம்...!!!

-மைக்கேல் ராஜ்

Tags:    

Similar News