கதம்பம்

தெரிந்து கொள்வோம்!

Published On 2024-10-19 03:41 GMT   |   Update On 2024-10-19 03:41 GMT
  • முற்காலத்தில் எல்லாம், நீர்நிலைகளைப் பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒரு வேலையாகும்.
  • பயன் தராது எந்த வேலை செய்தாலும் அது வெட்டிவேலை என்றாகிவிட்டது.

நாம பயன்படுத்துற சில சொற்களை எதன் அடிப்படையில் அப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப்பார்த்திருப்போமா? அப்படி சில சொற்களை இங்கே பார்ப்போம்..

வெட்டிவேலை:

பயனில்லாமல், எந்தவொரு வேலையையும் செய்யாமல் இருந்தால் வெட்டியாக இருப்பதாகவும், பயனில்லாத ஒரு வேலையைச் செய்வதை வெட்டிவேலை என்றும் குறிப்பிடுகிறோம்.

முற்காலத்தில் எல்லாம், நீர்நிலைகளைப் பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒரு வேலையாகும். ஏனெனில், நம் நாட்டில் பெரும்பாலான இடங்கள் வானம் பார்த்த பூமிதான். அது காரணமாக அவரவர் ஊர்களில் இருக்கும் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களை வெட்டி, தூர்வாரி, ஆழப்படுத்தி பராமரித்துக் கொள்வார்கள். இதற்கென அந்தந்த ஊர் மக்களே அந்த வேலைகளைச் செய்வார்கள். இதற்கென ஊதியம் எதுவும் பெறமாட்டார்கள். அதாவது வெட்டி வேலை செய்வதற்கு எந்தப் பயனும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதுவே வெட்டி வேலை எனப்படும். நாளடைவில், பயன் தராது எந்த வேலை செய்தாலும் அது வெட்டிவேலை என்றாகிவிட்டது.

மணி:

நேரம் எவ்வளவு என்று கேட்பதற்கு நாம் மணி என்ன, மணி எத்தனை, மணி எவ்வளவு என்றுதான் கேட்கிறோம்.

கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு முன்னர், நாம் நேரத்தினைக் கணக்கிட மணிக்கூண்டு கட்டி வைத்து அதில் ஒரு மணியினை ஒலிக்கச் செய்தே நேரத்தினைத் தெரிந்து கொண்டு வந்ததால், எத்தனை மணி ஒலித்தது என்பதைக் கொண்டு நேரத்தை அறிந்து வந்தோம். அது சமயம் எத்தனை மணி அடித்தது என்று கேட்பதைப் போல் இன்றும் நேரத்தினை மணியோசையின் எண்ணிக்கையின்படியே கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

-பி.கே. பாபு

Tags:    

Similar News