இந்தியா
null

கேரள லாட்டரியில் கோவில் பூசாரிக்கு ரூ.1 கோடி பரிசு

Published On 2024-07-26 04:51 GMT   |   Update On 2024-07-26 09:05 GMT
  • லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார்.
  • பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மேப்பாறை பகுதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் மேல்சாந்தியாக இருப்பவர் மதுசூதனன். இவர் அந்த கோவிலில் 20 ஆண்டுகளாக தலைமை பூசாரியாக பணியாற்றி வருகிறார். பூசாரி மதுசூதனனுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.

அவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு சிறிய தொகை பரிசாக விழுந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர், தான் வாங்கிய லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல்பரிசான ரூ.1கோடி விழுந்திருக்கிறது.

பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது. அவரது அர்ப்பணிப்பான தெவ்வீக பணியின் ஆசீர்வாதத்தின் காரணமாகவே அவருக்கு லாட்டரியில் ரூ.1கோடி கிடைத்திருக்கிறது என்று அவர் பணிபுரியக்கூடிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுசூதனனுக்கு லாட்டரியில் ரூ.1கோடி விழுந்திருப்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அவருக்கு ஆதிரா என்ற மனைவியும், வைஷ்ணவ் மற்றும் வைகலட்சுமி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News