18 மாதத்தில் 11 கொலைகள்.. ஆண்களுக்கு லிப்ட் கொடுத்து ஓரினச்சேர்க்கை 'சீரியல் கில்லர்' செய்த கொடூரம்
- முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார்
- கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்
பஞ்சாபில் கடந்த 18 மாதங்களுக்குள் 11 ஆண்களை கொன்ற சீரியல் கில்லர் கொலையாளி போலீசில் பிடிபட்டுள்ளார்.
ஹோஷியார்பூரில் உள்ள கர்ஷங்கரின் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் 33 வயதான ராம் சரூப். போலீஸ் கூற்றுப்படி கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்று அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அதன்பின் அவர்களை கொலை செய்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துணியால் அவர்களின் கழுத்தை நெரித்ததாகவும்,சிலருக்குத் தலையில் காயங்கள் இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார் ராம் சரூப்.
ஆகஸ்ட் 18 அன்று மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ மற்றும் தண்ணீர் விற்கும் 37 வயது நபரை கொன்ற வழக்கில் ரூப்நகர் மாவட்டத்தில் வைத்து நேற்று [செவ்வாய்க்கிழமை] ராம் சரூப் கைது செய்யப்பட்டார். அதன்பின் நடந்த விசாரணையில்தான் அவர் மேலும் 10 பேரை கொலை செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.
இவற்றில் 5 கொலை வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 அன்று டோல் பிளாசா மோத்ராவில் டீ மற்றும் தண்ணீர் பரிமாறப் பழகிய 37 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் சரூப் மேலும் 10 பேரைக் கொன்றது தெரியவந்தது. இவற்றில் ஐந்து வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹோஷியார்பூர் மற்றும் ஃபதேகர் மாவட்டங்களில் இந்த கொலைகள் நடந்துள்ளன.
ஏப்ரல் 5 ஆம் தேதி 34 வயதான டிராக்டர் பழுதுபார்ப்பவரின் கொலை மற்றும் ஜனவரி 24 அன்று காரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் கொலை ஆகியவற்றையும் ராம் சரூப் தான் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிபோதையில் தான் குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
ராம் சரூப் -க்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் ஓரினச்சேர்க்கை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார்.