இந்தியா
உத்தரபிரதேசத்தில் மாடு முட்டி 15 பேர் காயம்
- ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது.
- 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஜலாலாபாத் நகரில் முக்கிய சாலை ஒன்றில் காளை மாடு ஒன்று திடீரென்று ஆவேசமாக ஓடியது. அந்த மாடு சாலையில் சென்றவர்களை விரட்டி சென்று முட்டியது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் மாடு முட்டி தாக்கியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த மாட்டை பிடிக்க நகராட்சி ஊழி யர்கள் முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய மாடு சாலையில் வேகமாக ஓடியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர். சில நாட்களுக்கு முன்பு கிரேட்டர் வெஸ்ட் பகுதியில் மாடு ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அதை ஓட்டி வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.