இந்தியா

ஜார்க்கண்டில் பரபரப்பு: சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

Published On 2024-08-01 09:10 GMT   |   Update On 2024-08-01 09:48 GMT
  • ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜ.க.வும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததால் அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் நாளை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டசபையின் லாபியில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News