இந்தியா

ஆந்திர சிமெண்டு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 2 தொழிலாளர்கள் பலி

Published On 2024-07-08 04:44 GMT   |   Update On 2024-07-08 04:44 GMT
  • தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் பிரிவில் ஆந்திராவை சேர்ந்த 9 தொழிலாளர்களும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 20 பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
  • 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், ஜக்கையா பேட்டையில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் பிரிவில் ஆந்திராவை சேர்ந்த 9 தொழிலாளர்களும், பீகார்,உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 20 பேர் நேற்று வேலை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது கொதிகலனுக்கு கியாஸ் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு கொதிகலன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவுலா வெங்கடேஷ், பரிதலா அர்ஜுன் ஆகியோர் உயிரிழந்தனர்.

3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News