செய்திகள்

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

Published On 2018-02-07 04:17 GMT   |   Update On 2018-02-07 04:17 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சாம்பவாத் பகுதியில் இன்று காலை 8 பேர் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். மலைப்பாதையில் சவாலா என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, அதில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



இதேபோல் இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலம் பால்கர் நகரில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசத்தில் கந்த்வா-பரோடா நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். #tamilnews

Similar News