செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் வெங்கயம் விலை கிடுகிடு சரிவு - கிலோ 50 பைசாவுக்கு விற்பதாக விவசாயிகள் புலம்பல்

Published On 2018-05-20 13:51 GMT   |   Update On 2018-05-20 13:51 GMT
மத்தியப்பிரதேசத்தில் அதிக விளைச்சல் காரணமாக வெங்காயத்தின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. #onion
போபால்:

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிகளவிலான வெங்காய விளைச்சல் காரணமாக தலைநகர் போபாலில் அமைந்துள்ள போபால் விவசாயிகள் விளைபொருள் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு அதிகரித்துள்ளது. அதிக விளைச்சல் காரணமாக வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 

தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 50 பைசா முதல் 5 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வெங்காயம் விளைச்சல் தற்போது அதிகரித்து இருப்பதால் இன்னும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் குவிண்டால் வெங்காயம் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெங்காயத்தின் விலை மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #onion 
Tags:    

Similar News