செய்திகள்

ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் தீண்டமையை ஒழிக்க வேண்டும் - வெங்கைய்யா நாயுடு

Published On 2018-05-21 13:09 GMT   |   Update On 2018-05-21 13:09 GMT
ஜாதியை காரணம் காட்டி ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் தீண்டமையை ஒழிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu
கொச்சி :

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள கலாடி பகுதியில் உள்ள ஆதி சங்கர பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்ற ஆதி சங்கர இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடு விடுதலை அடைந்து இவ்வளவு வருடங்கள் கழித்து சாதியை காரணம் காட்டி ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது, கடவுளை வணங்க எதிர்ப்பு தெரிவிப்பது, உயர் ஜாதி, கீழ் ஜாதி போன்ற வேற்றுமைகள் இப்போதும் நாடு முழுவதும் இருப்பது துரதிஷ்டமாகும். எனவே, இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக உள்ள இந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். 

பழம் பெரும் ஆன்மிகவாதியும், இந்த கல்வி நிலையத்தை தோற்றுவித்தவருமான ஆதி சங்கரர் தீண்டாமைக்கு எதிராக பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். அவர் ஒரு போதும் இந்து மதத்தில் தீண்டாமையை அனுமதித்தது இல்லை. எனவே, அவர் வழியில் நாமும் தீண்டாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். யார் ஒருவரையும் நாம் விலக்கி வைக்க கூடாது, யார் ஒருவரிடத்திலும் நாம் வேற்றுமையை காட்ட கூடாது, யாரொருவரின் வாய்ப்புகளையும் நாம் மறுக்க கூடாது. இவற்றை செய்ய நமக்கு ஒரு மணி நேரம் போதுமானது என தெரிவித்தார்.

மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அதிக கவணம் செலுத்தி, அணைத்து சமூகத்துடனும் இனக்கமாக இருந்து அதிக மகிழ்ச்சி மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழ்க்கை வாழ வேண்டும்

இவ்வாறு  துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கூறினார். #VenkaiahNaidu
Tags:    

Similar News