செய்திகள்

திருப்பதியில் இருந்து சென்னைக்கு ரூ.50 லட்சம் செம்மரம் கடத்தல் - 4 பேர் கைது

Published On 2018-12-26 06:08 GMT   |   Update On 2018-12-26 06:08 GMT
திருப்பதியில் இருந்து சென்னைக்கு ரூ.50 லட்சம் செம்மரம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

காளஹஸ்தி அருகேயுள்ள கிருஷ்ணராஜபுரம் போலீசார் காளஹஸ்தி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேகமாக வந்த 2 கார்களை சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜூனா மற்றும் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது 2 கார்களிலும் 44 செம்மரங்களை கடத்தி சென்றது தெரியவந்தது. காரையும் செம்மரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பாஸ்கர், புகழேந்தி, பிரபு, உசேன் என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை சென்னைக்கு கடத்தியதாக தெரிவித்தனர். காரில் கடத்திவரப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ,50 லட்சம் என கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. எவ்வளவு செம்மரம் கடத்தி உள்ளனர்.

கடத்தப்படும் செம்மரங்களை எங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News