செய்திகள்

பீகார் பாராளுமன்ற தேர்தல் - மெகா கூட்டணியில் இட ஒதுக்கீடு முடிந்தது

Published On 2019-03-29 09:26 GMT   |   Update On 2019-03-29 10:00 GMT
பீகார் மாநிலத்தில் 4 கட்டங்களாக நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டரிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் இன்று தொகுதி உடன்பாடு முடிவானது. #Biharmahagathbandhan #mahagathbandhanseatsharing
பாட்னா:

பீகார் மாநிலத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ், ராஷ்டரிய லோக் சமதா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, விக்காஷீல் இன்ஸான் ஆகிய கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.

இந்த அறிவிப்பின்படி, ராஷ்டரிய ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் சமதா 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்சசா 3 தொகுதிகளிலும், விக்காஷீல் இன்ஸான் 3 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றன. ஆரா தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து எங்கள் கூட்டணியில் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் சசாராம் தொகுதியில் நிற்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட்னா சாகிப் தொகுதியில் பாஜகவில் இடமளிக்காமல் ஒதுக்கப்பட்ட நடிகர் சத்ருகன் சின்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோல்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் நிறுவன தலைவர் சரத் யாதவ் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராக மாதேபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். #Biharmahagathbandhan #mahagathbandhanseatsharing
Tags:    

Similar News