இந்தியா

வலுக்கட்டாயமா வரதட்சணை கொடுக்குறாங்க மேடம்.. பெண் வீட்டார் மீது வழக்கு தொடர்ந்த மாப்பிள்ளை

Published On 2024-11-09 13:12 GMT   |   Update On 2024-11-09 14:23 GMT
  • மணமகன் மீது பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
  • மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் 1961 ஆண்டு மே 1 முதல் அமலில் உள்ளது. அதன்படி இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

வரதட்சணை தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில் வரதட்சணை கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில், தான் கேட்காமலேயே தனக்கு வரதட்சணை கொடுத்ததாக தனது மனைவியின் குடும்பத்தினர் மீது மணமகனே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் விசாரணையில், மணமகன் மீது ஏற்கனவே பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக அக்டோபர் 5 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது.

மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ.25,000 காசோலையாகவும், ரூ.46,500-யை அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர்

இதனால் தன் மீது சுமத்துப்பட்டுள்ள புகாரை திசை திருப்பவே மணமகன் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளாரா என்ற சந்தேகம் வரவே, இரு தரப்பினரும் புகார் தொடர்பான ஆதாரத்தை சமர்ப்பித்த பிறகே இது தொடர்பாக முடிவு எடுக்க முடியும் என்று என நீதிமன்றம் தெரிவித்தது.

Tags:    

Similar News