இந்தியா

வீடியோ: Frame-குள்ள வராதே.. கட்சி ஊழியரை எட்டி உதைத்த பாஜக முன்னாள் அமைச்சர்

Published On 2024-11-12 12:50 GMT   |   Update On 2024-11-12 12:50 GMT
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
  • சிவசேனா தலைவர் அர்ஜுன் கோட்கரை பாஜகவை சேர்ந்த ராவ்சாகேப் தன்வே சந்தித்து பேசினார்.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாயுதி கூட்டணி கட்சிகள் (பா.ஜ.க., சிவசேனா (ஏக் நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)). மகா விகாஸ் அகாடி கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா (UBT-உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் ((சரத்சந்திரா பவார்)- சரத் பவார்) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா நகரில் சிவசேனா தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன் கோட்கரை பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே இன்று சந்தித்து பேசினார்.

அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது தன்வே பக்கத்தின் நின்ற கட்சி ஊழியர் ஒருவரை தன்வே கோவத்தில் எட்டி உதைத்து அங்கிருந்து அங்கிருந்து நகரும்படி கூறினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News