இந்தியா

கோப்புப்படம் 

OT பாத்திருக்கேன், லேட்டா தான் வருவேன்.. ஊழியரை நொந்து கொண்ட முதலாளி- நெட்டிசன்கள் கறார்..

Published On 2024-11-13 16:21 GMT   |   Update On 2024-11-13 16:21 GMT
  • இது தொடர்பான விவாதத்தை எக்ஸ் தளத்தில் தூண்டியது.
  • நாளை பணிக்கு தாமதமாகவே வருவேன்.

'நேரம் தவறாமை' அனைவரும் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். இந்த பழக்க வழக்கம் ஒருவரை வாழ்க்கையில் சிறந்த நபராக மாற்றவும் முக்கிய பன்பாகும். மாணவர்கள், அலுவலகம் செல்வோர், தொழில் செய்வோர் தொடங்கி அனைவரும் நேரத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.

அலுவகம் செல்வோர் சரியான நேரத்திற்கு செல்வதும், பணி நேரம் முடிந்ததும் அங்கிருந்து புறப்படுவதும் இயல்பான விஷயம் தான். எனினும், அலுவல் பணிகளை அந்த நேரத்தில் மட்டும் செய்வோர் மீது ஒரு தரப்பினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சமூகத்தில் இருந்து வருகிறது. பணி நேரம் முடிந்ததும் கிளம்பிவிடுகிறார்கள் என்றும் கொஞ்சமும் கூடுதல் நேரம் வேலை பார்ப்பதில்லை என்றும் நொந்து கொள்வோர் நம்மிடையே இருக்கத் தான் செய்கின்றனர்.

 


அந்த வகையில், அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர் தனது முதலாளிக்கு அனுப்பிய குறுந்தகவல் இது தொடர்பான விவாதத்தை எக்ஸ் தளத்தில் தூண்டியது. சம்பந்தப்பட்ட ஊழியர் குறிப்பிட்ட நாளில் தனது பணி நேரம் முடிந்து கூடுதல் நேரம் பணியாற்றி இருக்கிறார். இதன் காரணமாக நாளை பணிக்கு தாமதமாகவே வருவேன் என்று முதலாளிக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார்.

அவர் அனுப்பிய குறுந்தகவலில், "வணக்கம், இன்று நான் அலுவலகத்தை விட்டு 8.30 மணிக்கு புறப்படுவதால் நாளை காலை 11.30 மணிக்கு அலுவலகம் வருவேன்," என குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறுந்தகவலை ஸ்கிரீன்ஷாட் எடுத்த முதலாளி அதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, "என் ஜூனியர் இதை அனுப்பியதை என்னால் நம்ப முடியவில்லை. இந்தக் காலத்து இளைஞர்கள் வேற மாதிரி உள்ளனர். அவர் கூடுதல் நேரம் பணியாற்றிவிட்டு, அதனை ஈடு செய்யும் விதமாக அலுவலகத்திற்கு தாமதமாக வரப்போகிறார். என்னவொரு நடவடிக்கை, என்னிடம் இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை," என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பலர் குறுந்தகவல் அனுப்பிய ஊழியர் செய்தது தான் சரி என்றும், சிலர் அவர் உங்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் என்றும் ஊழியர் பக்கம் இருக்கும் நியாயத்தை கமென்ட் செய்துள்ளனர்.

Tags:    

Similar News