இந்தியா

அணையின் மேல் சீறிப் பாய்ந்த ராகுல் காந்தி: கேரளாவில் மிக நீளமான ஜிப்லைனில் பயணம்

Published On 2024-11-13 21:42 GMT   |   Update On 2024-11-13 21:42 GMT
  • கேரளாவின் மிக நீளமான ஜிப்லைனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயணம் செய்தார்.
  • அப்போது, தென்னிந்தியாவின் மிகப் பெரிய ராட்சத ஊஞ்சல் என வர்ணித்தார்.

திருவனந்தபுரம்:

வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட்டனர்.

இதற்கிடையே, பிரியங்கா காந்தி வெற்றி பெற்றால் வயநாடு தொகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், கராப்புழா அணைப்பகுதிக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வருகை தந்தனர். அங்கு அமைந்துள்ள கேரளாவின் மிக நீளமான ஜிப்லைனில் ராகுல் காந்தி பயணம் செய்தார்.

'தென்னிந்தியாவின் மிகப்பெரிய ராட்சத ஊஞ்சல்' என்று வர்ணித்த ராகுல் காந்தி, வயநாடு எப்போதும்போல் பிரமிக்க வைக்கிறது. ஜிப்லைனில் சென்ற ஒவ்வொரு நொடியும் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என தெரிவித்தார். ராகுல் காந்தியின் ஜிப் லைன் பயணம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags:    

Similar News